தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சைப் பிரிவுகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், விபத்து மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு, முடநீக்கியல் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அதிநவீன கிருமி நீக்கம் வழங்கல் பிரிவு, அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு தீவிரச் சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு, கதிர்வீச்சுத் துறை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவைகள் புதிதாக திறந்து வைக்கப்பட்டன.