தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஆண்டு இறுதிக்குள் 4,500 பணியாளர்கள் நியமனம்’ - விஜய பாஸ்கர் தகவல்

தஞ்சாவூர்: இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக 4,500 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijaya bhaskar

By

Published : Nov 9, 2019, 8:09 PM IST

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எட்டு மாவட்ட மக்கள் உயர் அறுவை சிகிச்சை வசதி பெறும் வகையில் ரயில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு அம்மா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முடநீக்கியல் துறை சார்பில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதி நவீன அறுவை அரங்கு, அதிநவீன மத்திய கிருமி நீக்கம் மற்றும் வழங்கல் துறை, உயர் சிறப்பு தீவிர சிகிச்சை இருதய சிகிச்சை ஆகியவற்றை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், துரைக்கண்ணு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் திறந்துவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், "மருத்துவர்களின் போராட்டம் பற்றி தமிழ்நாடு முதலமைச்சரிடம் கூறி உள்ளேன், அரசு அளித்த உறுதியின்படி மருத்துவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும், எம்.ஆர்.பி.யில் பணிபுரியும் 9,533 செவிலியர் தமிழ்நாடு அரசால் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதை அடுத்து இரண்டு மடங்கு ஊதிய உயர்வு வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு

பணி காலியிடத்திற்கு தகுந்தவாறு பணி நிரந்தரம் செய்து வரப்படுகிறார்கள். நவம்பர் இறுதிக்குள் 2,345 செவிலியர், 1,234 கிராமப்புற செவிலியர், 90 இயன்முறை மருத்துவர்கள் என மொத்தம் 4,500 பேர் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாகப் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மருத்துவத் தேர்வு முறைகேடு: மற்றுமொரு மருத்துவக் கல்லூரி தேர்வு மைய அங்கீகாரம் ரத்து

ABOUT THE AUTHOR

...view details