மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாகேஸ்வரர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும்.
முதலமைச்சரை சிக்கவைக்க முயற்சி : அமைச்சர் குற்றச்சாட்டு - அதிமுக
தஞ்சாவூர்: கொடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சிக்கவைக்க சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
os
கொடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சரை சிக்கவைக்கவாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது” என்றார்.