தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிராவில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்: நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் மீட்பு

கடந்த நான்கு ஆண்டுகளாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நபர் தஞ்சாவூரில் மீட்கப்பட்டார்.

By

Published : Jul 29, 2022, 7:09 PM IST

Published : Jul 29, 2022, 7:09 PM IST

மகாராஷ்டிராவில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்
மகாராஷ்டிராவில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

தஞ்சாவூர்: மகாராஷ்டிரா மாநிலம், வாசிம் மாவட்டம், சுகாலி கிராமத்தை சேர்ந்தவர் கேசவ்ராவ் மெஷ்ராம் என்பவரின் மகன் பிரகாஷ் (28). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்ட நிலையில், உடன் பிறந்த சகோதரரான சூரஜ் (25) என்பவரோடு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு பிரகாஷ் வெளியேறி விட்டார். இது குறித்து பிரகாஷின் சகோதரர் சூரஜ், சுகாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

மகாராஷ்டிராவில் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இதற்கிடையே, கடந்த 10ஆம் தேதி தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் பல நாட்களாக நீண்ட தலைமுடியுடனும், கிழிந்த மற்றும் அழுக்கான சட்டையுடனும், இரண்டு கால்கள் இல்லாத நிலையிலும் இருந்துள்ளார்.

இவரை பார்த்த அப்பகுதியை சேர்ந்த காமேஸ்வரன், பிரதீப் மற்றும் அன்பழகன் ஆகிய இளைஞர்கள் இவரை பத்திரமாக மீட்டு தகவல் கேட்டறிந்தனர். அப்போது, காணாமல்போன பிரகாஷ் இந்தி மொழியில் பேசி உள்ளார். மொழி தெரியாத காரணத்தால் ஒரு வாரம் உணவு அளித்து, தங்க இடம் கொடுத்து பிரகாஷை அந்த இளைஞர்கள் பராமரித்து வந்துள்ளனர்.

பின்னர் மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூரில் செயல்பட்டு வரும் சமூக சேவகர் பாரதிமோகன் அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடந்த 18ஆம் தேதி ஸ்ரீரங்கராஜபுரம் வந்த அறக்கட்டளையின் சமூக சேவகர்கள், அவருக்கு முடி திருத்தம் செய்தும், குளிக்க வைத்தும் புதிய ஆடைகள் அளித்தனர். பிரகாஷிடம் அவரது உறவினர்களின் தொடர்பு எண் பெற்று தகவல் தெரிவித்ததன் பேரில் அவரது சகோதரர் சூரஜ் மற்றும் சித்தப்பா மகன் விஜய் ஆகிய இருவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தனர்.

இதனையடுத்து, அறக்கட்டளை சமூக சேவகர்கள் மற்றும் ஸ்ரீரங்கராஜபுரம் இளைஞர்கள் ஆகியோர் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில், கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் முன்னிலையில் பிரகாஷை அவரது உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைத்தனர். மேலும் இத்தகைய சமூக சேவையில் ஈடுபட்ட பாரதிமோகன் அறக்கட்டளைக்கும், அதனை சார்ந்த சமூக சேவகர்களுக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

அப்போது பிரகாஷிடம் போலீசார் கும்பகோணத்தில் வசிக்கும் வடமாநில பெண்ணான பூனம் என்பவரின் துணையோடு விசாரணை செய்த போது, சில வருடங்களுக்கு முன்பு அன்றாட செலவிற்கு பணம் இல்லாத காரணத்தால் பசி வாடிவதைந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு நாள் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றபோது, அவரது இரண்டு கால்களும் சேதமடைந்து விட்டது. தனது குடும்பத்தில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் தமிழ்நாடு வந்ததாகவும், மொழி தெரியாத காரணத்தால் கும்பகோணம் வரை தொடர்ந்து பயணம் செய்து வந்ததாகவும் பிரகாஷ் கூறியதாக வடமாநில பெண் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரிசி, தயிர், முட்டை போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு அதிக ஜிஎஸ்டி... நெல்லையில் நூதனப்போராட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details