பட்டுக்கோட்டை கிழக்குக் கடற்கரை சாலையில் ஏரிப்புறக்கரை அருகே வேளாங்கண்ணியிலிருந்து மரம் ஏற்றிக் கொண்டு மதுரைக்கு சென்ற லாரி ஏரிப்புறக்கரை பிரிவு சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து! - pattukkottai
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மரம் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
லாரி விபத்து
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மரங்கள் சாலையில் சரிந்ததால் அதனை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து பல மணி நேரமாக தடைப்பட்டுள்ளது.