தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுவாமிமலை அருகே உள்ள சிலைவடிக்கும் பட்டறையில், தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சிலைவடிக்கும் பட்டறைக்கு விரைந்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், சுமார் 4 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட பழங்கால நடராஜர் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் இல்லாததால், நடராஜர் சிலையை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சிலைவடிக்கும் பட்டறையை நடத்தி வந்த சுரேஷ் குமார் மீது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைப்பற்றப்பட்ட நடராஜர் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட நடராஜர் சிலை தமிழ்நாட்டின் எந்த கோயிலுக்குத் தொடர்புடையது என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!