தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடத்தி வரப்பட்ட 2,300 மதுபாட்டில்கள் பறிமுதல்! - thanjavur

தஞ்சாவூர்: காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Apr 13, 2019, 11:27 PM IST

வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 16ஆம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நாட்களில் அதிக விலைக்கு விற்பதற்காக காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் கும்பகோணம் ஸ்ரீராம் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகவேல் தலைமையில் சென்ற தனிப்படை ஸ்ரீராம் நகர் மாரிமுத்து என்பவர் வீட்டில் 49 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,352 குவாட்டர் மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாரிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details