தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காசிராமன் தெருவில் இயங்கிவந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ஆம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணம் தீ விபத்து: மொட்டுகள் கருகி 15ஆண்டுகள் நிறைவு! - kumbakonam school fire accident
தஞ்சாவூர்: 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த கும்பகோணம் தீ விபத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கும்பகோணம்
இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் நினைவாக பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலம் அருகே பூங்காவில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தீ விபத்து நடைபெற்றதன் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டை போல், இந்த ஆண்டும் குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளைப் படைத்து தங்களின் அன்பினை பெற்றோர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.