கும்பகோணத்தில் மௌனசாமி மடம் மேதா தெருவில் வசித்துவந்த விஜய் என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்துவந்தார். இந்நிலையில் நேற்று மேலக்காவிரியில், காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
ஆற்றில் அடித்துச் செல்லபட்ட ஆட்டோ ஓட்டுநர் உடல் மீட்பு! - Kumbakonam
தஞ்சாவூர்: ஆற்றில் அடித்துச் செல்லபட்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுனர் விஜய்
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மனஞ்சேரி அருகே விஜய்யின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவிடைமருதூர் காவல் துறை ஆய்வாளர் விஜயா விசாரணை செய்துவருகிறார். விஜய் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் பணி - தொடங்கியது மத்திய அரசு!