தஞ்சை மாவட்டம்கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் லட்சுமிகாந்தன். இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையறிந்த அடையாளம் தெரியாத கும்பல் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், வைரத்தோடு ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றனர்.
கும்பகோணத்தில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை
தஞ்சை: கும்பகோணத்தில் பட்டப்பகலில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய லட்சுமிகாந்தன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே இக்கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்று சவரன் நகை, ரொக்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.