இதுகுறித்து தஞ்சாவூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும், கேரளாவில் ஒரு மாவட்டத்திலும் செயல்பட்டுவருகிறது.
அவற்றில் இதுவரை வெற்றிகரமாக 50,000 பெண் பயனீட்டாளர்களுக்கு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது தையல் கலை, பின்னல் கலை, உணவுப் பொருட்கள் தயாரித்தல், காகித பை தயாரித்தல், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பயிற்சிகள் என இந்த வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனீட்டாளர்கள் கலந்துகொண்டனர். ரூ. 3.26 கோடி மதிப்பிலான கடன் உதவிகளும் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..!