தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

37 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700-க்கும் மேற்பட்ட காளைகள், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்குபெற்றனர்.

jallikattu-held-after-37-years-over-700-bulls-participating
jallikattu-held-after-37-years-over-700-bulls-participating

By

Published : Mar 1, 2020, 11:21 AM IST

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு வீரமுனியாண்டவர் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதனைத் தஞ்சை கோட்டாட்சியர் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

மேலும் இப்போட்டியில் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

37 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

அதேபோல் போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்க 108 ஆம்புலன்ஸ் வசதியும், மருத்துவக் குழுவினரும் தயார் நிலையிலிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் காளைகள், வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டபிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் இப்போட்டியினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விவசாய தோட்டத்தில் புகுந்த 2 யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details