தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஏஏ காரணமாக சந்தனக்கூடு விழாவை தவிர்த்த இஸ்லாமியர்கள்

தஞ்சை: அதிராம்பட்டினம் ஷேக் நசுருதீன் ஒளிஉல்லா தர்கா சந்தனகூடு விழாவில் வழக்கமாக நடைபெறும் ஊர்வலத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் சிஏஏ எதிர்ப்பு காரணமாக இஸ்லாமியர்கள் தவிர்த்தனர்.

அதிராம்பட்டினம் ஷேக் நசுருதீன் ஒளிஉல்லா தர்கா
அதிராம்பட்டினம் ஷேக் நசுருதீன் ஒளிஉல்லா தர்கா

By

Published : Feb 26, 2020, 7:53 AM IST

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ளது காட்டுப்பள்ளி எனப்படும் ஷேக் நசுருதீன் ஒளிஉல்லா தர்கா. ஆண்டுதோறும் இந்தத் தர்காவில் சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது, நகரின் முக்கிய வீதிகளில் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் இந்த விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு தர்கா முழுவதும் தோரணங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன. ஆனால் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அதிராம்பட்டினம் ஷேக் நசுருதீன் ஒளிஉல்லா தர்கா

அதன் பொருட்டு இவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த விழாவிற்க்கான ஊர்வலம், கலை நிகழ்ச்சிகளை தவிர்த்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடும் இந்த விழாவிற்கு இந்த ஆண்டு மிக சொற்ப அளவு மக்களே வந்திருந்தனர்.

இதையுடன் படிங்க; 21 அரிவாள் மீது 68 முறை‌‌ நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி

ABOUT THE AUTHOR

...view details