தஞ்சை மாவட்டம் மேரிஸ் கார்னர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு கடந்த 15 ஆம் தேதி இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
ஐயம் வாட்ச்சிங் யூ... சிசிடிவியில் சிக்கிய டயர் திருடர்கள்! - ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ்
தஞ்சை: ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் டயர் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
இதில் பைக்கில் பின்பக்கம் அமர்ந்து வந்த இளைஞர் கடைக்குள் சென்று டயரை கையில் எடுத்து விலை பேசி வெளியில் வருவதற்குள், வெளியே இருசக்கர வாகனத்தில் இருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை தயார் நிலையில் வைப்பதும், பிறகு டயருடன் வெளியே வந்த இளைஞர் அந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக ஏறிச் செல்லும் காட்சியும் அருகில் இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகியது.
இது குறித்து அந்த கடைக்காரரிடம் கேட்ட போது சிசிடிவி காட்சியை பார்த்து அந்த இளைஞர்களிடம் டயருக்கான தொகையை பெற்றுவிட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:கொடுத்துவச்சவ இந்த கல்யாணி: பிறந்தநாளை எப்படி கொண்டாடுரானு பாருங்க...!