தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து நலம் பெற்ற பொன்.மாணிக்கவேல்! - Thanjavur Latest News

தஞ்சை: ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து, ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஐஜி பொன்.மாணிக்கவேல் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ig Pon.Manikawel, who is in good health with Angio treatment
ig Pon.Manikawel, who is in good health with Angio treatment

By

Published : Jul 5, 2020, 8:25 AM IST

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியும் ஓய்வு பெற்ற காவல் துறை ஐஜியுமான பொன். மாணிக்கவேல் நெஞ்சுவலி காரணமாக நேற்று(ஜூலை 4) தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், அவர் சாப்பிடும் உணவு சரிவர செரிக்காத நிலையில் வாய்வு ஏற்பட்டு, நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதனால் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வரப்பட்டு ஈசிஜி எடுத்தபோது, அதில் அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளித்து அடைப்பை நீக்கி, ஸ்டன்ட் பொருத்தியுள்ளனர்.

தற்போது அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், மூன்று தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details