தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரியாதைக் குறைவாக பேசினால் தொலைத்து விடுவோம் - பாஜக கருப்பு முருகானந்தம் ஆவேசப்பேச்சு - டாஸ்மாக்

திமுக ஆட்சி ரெம்ப நாள் நீடிக்காது, காவல்துறை கூலிப்படையை போல செயல்படுகிறது பாஜக தலைவரை வா போ என மரியாதை குறைவாக பேசினால் தொலைத்து விடுவோம் என பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் பேசியுள்ள நிகழ்வு, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

If we speak disrespectfully, we will be lost - BJP Karupu Muruganandam furious speech
மரியாதைக் குறைவாக பேசினால் தொலைத்து விடுவோம் - பாஜக கருப்பு முருகானந்தம் ஆவேசப்பேச்சு

By

Published : Jun 29, 2023, 11:47 AM IST

Updated : Jun 29, 2023, 12:24 PM IST

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையில் அமைந்துள்ள (வேலம்மாள்) தனியார் சிபிஎஸ்ஸி பள்ளிக்கான பிரதான நுழைவு பிரச்சினைக்கு, தனியார் தொழிலதிபர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்சினையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் குறுகிய பாதையில் பள்ளிக்கு சென்று வரவேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது.

ETV Bharat

இதுகுறித்து இதுவரை 4 கட்ட போராட்டங்கள் நடத்தியும், தீர்வு காணப்படாத நிலையில், சாக்கோட்டை 3 சாலை சந்திப்பு அருகே பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இவர்களை நாச்சியார்கோயில் போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், மாநகர் தலைவர் (மேற்கு) வாசன் வெங்கட்ராமன் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி, உள்ளிட்ட 8 பேரை மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நீதிபதி முன் ஆஜர் செய்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க கோரியும், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு பாஜக பிரமுகர் பண்ணை வயல் இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்,

இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் அப்போது, அவர் பேசியதாவது, பள்ளி மாணவர்கள் பிரச்சினைக்காக போராடியதற்கு சிறை தண்டனையா ? அரசியல் கட்சிகள் பொதுப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை இல்லையா ? வேண்டும் என்றே பாஜக தலைவர் சதீஷ்குமார் மீது பொய் வழக்கு போட்டு காவல்துறை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது

பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என 10 மணி நேரம் செயல்படும் அரசு மதுபான கடைகள் கூடுதல் நேரம் செயல்படவும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் தவிர நூற்றுக்கணக்கான அனுமதிக்கபடாத வாகனங்களில் மணல் கொள்ளை அடிக்கவும், கஞ்சா விற்பவர்களிடம் போதை பொருட்கள் விற்பனை செய்பவரிடம் காவல்துறையினர் வாங்கும் மாமுல் குறித்த பட்டியல் வெளியிட வேண்டும் என நினைக்கிறீர்களா ?

நீங்கள் காவல்துறையா கூலிப்படையா ? நீங்கள் என்றும் கேட்டதுடன், இது ஜனநாயக நாடா ? சர்வாதிகார நாடா ? என்றும், தமிழகத்தில் திமுக ஆட்சி ரொம்ப காலம் நீடிக்காது, கலைக்கப்படும் காலம் நெருங்கி விட்டது, அதை தான் நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள், மிரட்டல், அச்சுறுத்தலுக்கு எல்லாம் பாஜக பயப்படாது, பாஜக காரன் கைது செய்து சிறைக்கு சென்றால் சிரித்து கொண்டே செல்வான், ஆனால் திமுக காரன் அழுது கொண்டு தான் செல்வான் என்றும், பாஜக மாவட்ட தலைவரை வா போ என மரியாதை இல்லாமல் சில காவல்துறை அலுவலர்கள் பேசுகிறார்கள், இப்படி பேசுவது தொடர்ந்து தொலைத்து விடுவோம் தொலைத்து, ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி வா போ என்று திமுக மாவட்ட செயலாளரை பார்த்து பேச முடியுமா ? உங்கள் சட்டையை கழற்றி விடுவான் என்றும், உலக அளவில் சிறப்பாக பேசப்பட்ட தமிழக காவல்துறை தற்போது திமுக பொறுப்பேற்ற பிறகு, காவல்துறை கேவலப்பட்டு கிடக்கிறது, அதன் மரியாதை காற்றில் பறக்கிறது, இந்த ஆட்சி நிரந்தரம் இல்லை, இது 2026 வரை நீடிக்குமா ? முதல்வர் இருப்பாரா ? இந்த ஆட்சி ஒரு வருடம் நீடிக்குமா ? 6 மாதம் நீடிக்குமா அல்லது 3 மாதம் நீடிக்குமா என்பது தெரியாது.

காவல்துறையினரே புரிந்து கொள்ளுங்கள், ஆட்சிகள் மாறும், காட்சிகளும் மாறும் என்றும் மாவட்ட தலைவர் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனவைரும் விடுவிக்கப்படும் வரை பாஜக சார்பில் நாள்தோறும் ஒரு போராட்டம் நடைபெறும், பள்ளி பாதை தொடர்பாக அடுத்த போராட்டம் என் தலைமையிலும், அதன் பிறகும் பிரச்சினை தீரவில்லை எனில் எச் ராஜா தலைமையிலும் பிறகு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆவேசமாக பேசினார். அவரின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில், பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Bakrid: மயிலாடுதுறையில் செல்பி எடுத்து பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்த இஸ்லாமியர்கள்

Last Updated : Jun 29, 2023, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details