தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஒரத்தநாடு எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, ஏனாதி பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து கோஷமிட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ பங்கேற்பு! - human chain protest at tanjore
தஞ்சாவூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் திமுக எம்.பி பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
human chain protest
சரியாக 5 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த மனித சங்கிலி போராட்டம் ஆறு மணியளவில் நிறைவு பெற்றது. இந்த போராட்டத்திற்கு பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு வழங்கினர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஏற்பட்டது. இது தவிர கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.