மக்களவைத் தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டுமென பாஜக தீவிர வியூகங்கள் வகுத்துவருகிறது. அதற்கான களப்பணிகளிலும் அக்கட்சியினர் இறங்கியுள்ளனர். ”தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அக்கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் தமிழிசையும், சிவகங்கையில் ஹெச்.ராஜாவும் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
360 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: கெத்து காட்டும் ஹெச்.ராஜா!
தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் பாஜக 360 தொகுதிகளை கைப்பற்றும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கும்பகோணம் அடுத்துள்ள சுவாமி மலையில் சிறப்பு யாகம் நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக வலிமையுடன் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் 360 தொகுதிகளை கைப்பற்றும்.
தமிழக அளவில் பாஜக கூட்டணி 30 முதல் 35 தொகுதிகளை கைப்பற்றும். தற்போது தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூட்டணி, தேச பக்த சக்தி நலனில் அக்கறைகொண்ட கட்சிகளுடன் கூட்டணி. இந்தக் கட்சிகளை வைத்து வாக்காளர்களிடம் வாக்கு கேட்போம்” என்றார்.