தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சாமியார் மடம் டி.வி.எஸ் காலனியில் வசித்து வருபவரும் சுரேஷ் மகன் ஹரிஹரன்(14). இவர் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். குத்துச்சண்டையில் ஹரிஹரனுக்கு அதிக ஆர்வம் இருப்பதையறிந்த பள்ளி தலைமையாசிரியர் அவருக்கு உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களை வைத்து குத்துச்சண்டை பயிற்சியளிக்க உதவி வந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி அவர், திருச்சியில் நடைபெற்ற "ஸ்கூல் கேம் அண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா" எனும் பள்ளிகளுக்கிடையேயான குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார். அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறுவட்ட அளவிலான 7 போட்டிகளில் வென்று, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்குத் தேர்வானார்.