தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரையில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 4 மாணவிகள் காயம்!! - அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காயம்

Cement roof collapse in government school: அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டட மேற்கூரையில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை பெயர்ந்து கீழே விழுந்ததில் 4 மாணவிகள் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 12:14 PM IST

அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரையில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 4 மாணவிகள் காயம்

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே சோழபுரத்தில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்படும், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 350 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி நேற்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) வகுப்பறையின் கட்டடத்தின் மேற்கூரையில் பூசப்பட்டு இருந்த சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து உள்ளது, இதில் 6ஆம் வகுப்பு மாணவியர்களான அஸ்மிதா, கிருத்திகா, தரண்யா, ராகினி ஆகிய 4 சிறுமியர்கள் லேசான காயமடைந்தனர்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து தகவல் அறிந்து சோழபுரம் காவல் நிலைய போலீசார், இப்பள்ளியில் சேதமுற்ற கட்டட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அடுத்து பெரும் விபத்து ஏற்படும் முன்னர், பள்ளி கல்வித்துறை விரைந்து செயல்பட்டு, கட்டிட சீரமைப்பு பணிகளை முழுமையாக செய்திட வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை முன்வைத்து உள்ளனர்

இதையும் படிங்க: தஞ்சையில் தரம் உயரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்! மத்திய அரசின் சான்று...

ABOUT THE AUTHOR

...view details