காவிரி டெல்பா பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், குவிண்டாலுக்கு வழங்கப்படும் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், விவசாயிகள் சார்ந்த தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் அறுவடைக்கு முதலீடு செய்ய முடியாத சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர். இதனால் அரசு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்றும்; மேலும் காப்பீட்டுத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க, அரசு பட்ஜெட் மூலமாக வழங்க வழி வகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.