தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், ஒரு அறையில் மட்டும் கரும் புகை வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
லாட்ஜில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இளைஞர் பின்னர், சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், லாட்ஜின் 3ஆவது தளத்தில் உள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின் அறை முழுவதும் பரவியிருந்த தீயை நீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
அப்போது தான், உடல் கருகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. அவரது விபரம் குறித்து விசாரித்த அப்பகுதியினர், உடல் கருகி உயிரிழந்த நபர் நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் எனக் கண்டறிந்தனர்.
உயிரிழந்த நபர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டபோது அறை முழுவதும் தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் சந்தேகம் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.