தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதியுதவி! - Minister Duraikannu

தஞ்சாவூர்: தீ விபத்தால் பொருள்களை இழந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணு நிதியுதவி வழங்கினார்.

fire
fire

By

Published : May 21, 2020, 11:48 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மேம்பாலம் அருகே எம்ஜிஆர் நகரில் உள்ள தயாளன் ரத்தினம் என்பவர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரசு சார்பில் ஐயாயிரம் ரூபாயும், தனது சொந்த நிதியிலிருந்து ஐயாயிரம் ரூபாயும் வழங்கினார்.

மேலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்கினார்.அப்போது, கோட்டாட்சியர் வீராச்சாமி, வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கோவை இரும்பு குடோனில் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details