தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் துறைமுக மேம்பாட்டு பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
நிறைவடையும் நிலையில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி - தஞ்சாவூர்
தஞ்சாவூர் : பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுக பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மல்லிப்பட்டினம்
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மீனவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு துறைமுக மேம்பாட்டு கழகத்தின் மூலம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு அதற்கான பணிகள் இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது அந்த பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் சூழலில் இன்னும் முப்பது நாட்களுக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.