தஞ்சாவூர் நகரப்பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சூசைராஜ். இவர் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவரிடம் 41 லட்சம் ரூபாய் கடன் பெற்று 13 லட்சம் திருப்பி அளித்தும் பல லட்சம் வட்டியாகவும் கொடுத்துள்ளார்.
வீடு புகுந்து மிரட்டி பணம், நகை பறிப்பு - கந்துவட்டி அட்ராசிட்டி: ஆட்சியரிடம் பெண் புகார் - தஞ்சாவூரில் கந்துவட்டி கொடுமை
தஞ்சாவூர்: கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் பெண் புகார் மனு அளித்தார்.
கடந்த 27ஆம் தேதி டேவிட் 50-க்கும் மேற்பட்ட அடியாள்களுடன் சூசைராஜ் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி அருட்செல்வியை கத்தியைக் காட்டி இரண்டு லட்சம் ரூபாய், 22 சவரன் நகை, செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துச்சென்றார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அருட்செல்வி புகார் மனு அளித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.