தஞ்சாவூர்:வெண்ணாற்றங்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில் இன்று (நவ 26) சனிக்கிழமை என்பதால், பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் திரண்டனர்.
அப்போது தஞ்சை வண்டிக்கார தெருவைச் சேர்ந்த உமா, தனது உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஏறினார். அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், உமா அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை அறுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளார்.