தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடிக்கு 17 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய விவசாயிகள்! - மோடி

தஞ்சை: மத்திய அரசு அறிவித்திருந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு 17 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிவைத்து விவசாயிகள் நூதன முறையில் பேராட்டம் செய்தனர்.

thanjore

By

Published : Feb 6, 2019, 2:22 PM IST

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் சிறு,குறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோரும் ஆறாயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த தஞ்சை விவசாயிகள், சிறு, குறு, பெரு விவசாயிகள் என மத்திய அரசு விவசாயிகளை பிரித்து பாகுபாடு காட்டுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்த 6,000 ரூபாய் என்பது நாளொன்றுக்கு 17 ரூபாய்தான் வரும். இது விவசாயிகளை அவமானப்படுத்த கூடிய செயலாகும்.

மத்திய அரசு அறிவித்திருந்த தொகையை அதிகப்படுத்த வேண்டும், விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய விலை அறிவிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு 17 ரூபாயை மணி ஆர்டர் அனுப்பி நூதனமுறையில் போராட்டம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details