தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மரக்காவலசை, கொடிவயல், பாலாவயல் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என அங்கு வசிக்கும் மக்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தீர்மானம் - பாலாவயல்
தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தங்கள் தேவைகளை எந்த அரசும் பூர்த்தி செய்யாத காரணத்தால் இத்தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கப் போவதாகத் தஞ்சை மாவட்ட கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
தேர்தலை புறக்கணிப்போம்: தஞ்சை கிராம மக்கள்
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டது. அப்பேரிழப்பிலிருந்து, விவசாய பெருங்குடி மக்கள் இன்னும் மீளவில்லை. அரசின் எந்த நிவாரணமும் தங்களை வந்தடையவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் நடைபெற இருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.