தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை கிருஷ்ணன் கோயில் தேரடி கீழே வீதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் அர்ஜுனன் (60). இன்று காலை வீட்டின் அருகிலுள்ள 94 நம்பர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்துவதற்காக சென்று வாக்களித்துவிட்டு பின் வீட்டிற்கு திரும்பும்போது எதிர்பாராத விதமாக மயங்கிக் கீழே விழுந்தார்.
வாக்களித்த முதியவர் வீடு திரும்புகையில் உயிரிழப்பு! - தஞ்சாவூர் வக்களித்த முதியவர் வீடு திரும்புகையில் உயிரிழப்பு
தஞ்சாவூர்: அய்யம்பேட்டையைச் சேர்ந்த முதியவர் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, வீடு திரும்பும்போது உயிரிழந்தார்.
வக்களித்த முதியவர் வீடு திரும்புகையில் உயிரிழப்பு!
உடனடியாக அவரை அருகில் உள்ள அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர் . ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து அவரை வீட்டிற்கு தூக்கி சென்றனர். வாக்களித்துவிட்டு வீடு திரும்புகையில் மாரடைப்பால் முதியவர் இறந்ததால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.