தஞ்சாவூர்:அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பிஆர் பாண்டியன் தஞ்சையில் இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொது வினியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த அறிவிப்பின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை களம் இறக்குவது மட்டுமல்லாமல் மத்திய அரசு அறிவித்துள்ள சிறுதானிய ஆண்டின் கொள்கை முடிவுகளை சிதைக்கிற வகையில் தமிழக அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. எனவே, இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.