தேர்தல் விதிமுறையை மீறும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர் பகுதிகளில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி கொடி தோரணங்கள் அகற்றாமல் உள்ளது.
கட்சி கொடி அகற்றுவதில் பிரச்சனை: காவல் ஆய்வாளர் சமரசம்! - அதிமுக
தஞ்சாவூர்: கட்சி கொடிகள் அகற்றுவதில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, காவல்துறை ஆய்வாளர் கொடி அகற்றி சமரசம் செய்து வைத்தார்.
கட்சி கொடி அகற்றுவதில் பிரச்சனை: காவல் ஆய்வாளர் சமரசம்!
இதனால் திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் கொடுத்தும் கொடிகள் அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் மணிவேல் சம்பவ இடத்திற்கு வந்து கொடிகளை அகற்றி, இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்து கொடிகளை அப்புறப்படுத்தினர்.