தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக உரிய இடங்களைப் பெற்று அதிக இடங்களில் வெற்றிபெறும்' - உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெரும்

தஞ்சாவூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உரிய இடங்களைப்  பெற்று அதிக இடங்களில் வெற்றிபெறும் என அக்கட்சியின்  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

DMDK

By

Published : Oct 30, 2019, 7:45 PM IST

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உரிய இடங்களைப் பெற்று அதிக இடங்களில் வெற்றிபெறும். அனைத்து இடங்களிலும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் அரசு, பொதுமக்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அனைத்து இடங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை ஆட்சியாளர்கள் முறையாக மூட உதவிட வேண்டும், மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேமிப்புத் தொட்டிகளாக மாற்ற வேண்டும்" என்றார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தபோது

தொடர்ந்து பேசிய அவர், அரசு மருத்துவர்களின் நியமன கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசுவேன் என்றார்.

இதையும் படிங்க:’ஆறுவது சினம்’ என்பதுணர்ந்து முதலமைச்சர் கோபத்தைத் தவிர்ப்பாராக! - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details