தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் - District collector announcement

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

District Collector announces that he can apply for the Periyar Award
District Collector announces that he can apply for the Periyar Award

By

Published : Sep 3, 2020, 9:21 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் , சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக " சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது " தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1,00,000 விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் , தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2020 - ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழக்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுய விவரம், முழு முகவரியுடன் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details