தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திய மாவட்ட நிர்வாகம்!

தஞ்சாவூர்: பூதலூர் தாலுக்கா பகுதியில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

district-administration-that-isolated-those-who-worked-abroad-and-other-state
district-administration-that-isolated-those-who-worked-abroad-and-other-state

By

Published : Mar 26, 2020, 8:50 PM IST

நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள வெளி நாட்டினர், வெளி மாநிலத்தினரை தனிமைப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இதில் வெளி நாடுகளிலிருந்து திரும்பிய 39 பேர், வெளி மாநிலத்திலிருந்து வந்த 113 பேர் என மொத்தம் 152 பேர் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர்களைக் கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான குழு ஒன்று அமைப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும், அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் பணியாற்றியவர்களைத் தனிமைப்படுத்திய மாவட்ட நிர்வாகம்

மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், இவர்கள் மூலம் தொற்று ஏற்படாத வண்ணம் தங்களைப் பார்த்துக்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மருத்துவமனை, சுகாதாரப் பணியாளர்களை அதிகரிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details