தமிழ்நாடு

tamil nadu

குற்றவாளி தீட்சிதர்களை பூஜை செய்ய அனுமதிக்கக் கூடாது - தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் கோரிக்கை

By

Published : Jul 8, 2023, 4:54 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் அராஜகங்களை கண்டித்து மே 17 இயக்கம், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மற்றும் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் அராஜகங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் அராஜகங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் அராஜகங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்:கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, சிதம்பரம் நடராஜர் கோயிலில், தீட்சிதர்களின் அராஜகங்களை கண்டித்து, மே 17 இயக்கம், விடுதலை தமிழ்புலிகள் கட்சி மற்றும் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் “சிதம்பரம் கோயிலை கட்டியவர்கள் தமிழர்கள் தான். தமிழர்களின் வழிபாட்டு உரிமையை தீட்சிதர்கள் தடை செய்வது அராஜகத்தின் உச்சம். தமிழர் உரிமையை மறுப்பதற்கு துணை போகும் பாஜக, தமிழர் விரோத கட்சி. தமிழர் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.

தில்லை நடராஜர் கோயில், தீட்சிதர்களின் சொத்து அல்ல. தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட அவர்களுக்கு உரிமையும் இல்லை. தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி, சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “சிதம்பரம் கோயில் இன்று கிரிமினல்களின் கூடாரமாகவுள்ளது. சட்டவிரோத கும்பலாகவும், குற்றச்செயலில் ஈடுபடும் கிரிமினல்களாகவும் உள்ள தீட்சிதர்களை அங்கு பூஜை செய்ய அனுமதிக்கலாமா?. இது அவமானகரமானது. எனவே தீட்சிதர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திட வேண்டும்.

இது தமிழர்கள் கட்டி எழுப்பிய கோயில். எனவே இதனை மீட்டுடெடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். சிதம்பரம் கோயில் குறித்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும். காரணம் இது குறித்து ஏராளமான வரலாறு மற்றும் இலக்கிய சான்றுகளும், முறையான ஆவணங்களும் உள்ளது” என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் கூறும் போது, “தில்லை வாழ் அந்தணர்கள் என குறிப்பிடுவது தீட்சிதர்களை அல்ல. இதில் ஆள்மாறாரட்டம் நடந்துள்ளது. சிதம்பரம் கோயில் இவர்கள் கட்டியதும் அல்ல. சமீபகாலமாக இக்கோயிலை நிர்வகிப்பதற்காக, இதனை கைப்பற்றியுள்ளனர்.

தீட்சிதர்கள் என்பது ஒரு வகையறா அல்ல, தீட்சிதர்கள் என்பவர்கள் பிராமணர்களின் ஒரு சாதி. இந்த கோயில் தமிழர்கள் கட்டியது. சைவக்கோயிலில் வேதமுறை பின்பற்றப்படுகிறது. கோயில் சொத்துக்களை தீட்சிதர்கள் களவாடியிருக்கிறார்கள். பெண்கள் மீது தாக்குதல், கோயிலிலேயே மது அருந்துதல், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுதல் என அனைத்திலும் பங்கு வகித்துள்ளனர்.

அவர்களை விட ஒழுக்க கேடானவர்களை நாம் காணவே முடியாது” எனக் கூறினார். மேலும், சிதம்பரம் கோயில் தனிராஜ்ஜியமா? சட்டத்திற்குள் அடங்காதா? என கேள்வி எழுப்பியதுடன், 44 ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கும் தமிழக அரசிற்கு, இந்த ஒருகோயிலை நிர்வகிக்க முடியாதா? என்றும் 2014ல் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதியானது.

அப்போதைய தமிழக அரசு, உரிய ஆவணங்கள் இருந்தும் அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமலும், மூத்த வழக்கறிஞரை ஆஜராக செய்யாமலும், இவ்வழக்கில் தவறான தீர்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளனர். இத்தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், தமிழ்நாடு அரசு நிர்வாகம் செய்திடும் வகையில் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றிட வேண்டும் என்றும் திரு த. செயராமன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மனைவியை கொன்று சாமியார் கெட்டப்பில் சுற்றித்திரிந்த நபர் கைது..காவல் துறைக்கு குவியும் பாராட்டு..

ABOUT THE AUTHOR

...view details