தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - கொண்டாட்டத்தில் தஞ்சை விவசாயிகள்! - Delta Districts declared as Agricultural Zone by Tamilnadu Cm edappadi

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததையடுத்து விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விவசாயி
விவசாயி

By

Published : Feb 10, 2020, 10:19 PM IST

தமிழ்நாட்டில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து ரயில் நிலையம் முன்பு, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்பதாகவும்; ஆனால் இதை வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவே எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்" எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

கொண்டாட்டத்தில் தஞ்சை விவசாயிகள்

இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி தந்தை, இரண்டு மகன்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details