தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிச்சயதார்த்த விழாவில் வெடி விபத்து - சிறுவன் பலியான சோகம் - சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூர்: திருமண நிகழ்ச்சியில் வெடித்த வெடி பட்டு, ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

cracker accident
child death in thanjavur

By

Published : Aug 29, 2020, 2:13 PM IST

திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பந்தநல்லூர் முள்ளுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயியான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, சீர்வரிசை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது திருமணவீட்டார் கயிற்றில் கட்டிய வெடியை வெடித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அதனை, மாதிரிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் சக்தி (வயது 6) மற்றும் முள்ளுக்குடி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரவீன் (வயது 6) ஆகியோர் அருகில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அச்சிறுவர்கள் மீது வெடி பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில் சிறுவன் சக்தி, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் பிரவீனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பந்தநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெடி விற்பனை செய்த சின்னதுரை, பாண்டியன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். சீர்வரிசை விழாவில் நடந்த வெடி விபத்தால் சிறுவன் உயிரிழந்துள்ளது அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பூமிக்கடியில் மறைத்து வைத்திருந்த 1550 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு!

ABOUT THE AUTHOR

...view details