தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள சோழகம்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் நேற்று (அக்.17) ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, சோழகம்பட்டி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், கல்லணை கால்வாயில் பழுதடைந்த நிலையில் உள்ள கடமங்குடி- பொன்விளைந்தான்பட்டி இணைக்கும் புது ஆற்றுப்பாலத்தை புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும், பொன்விளைந்தான்பட்டி- கடமங்குடி இணைக்கும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜீவகுமார், ஒன்றிய செயலாளர்கள் காந்தி, பாஸ்கர், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பரமானந்தம், மணவாளன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோக்குமார், சிவகுமார், கவிதா, ஒன்றிய உறுப்பினர்கள் சிவசாமி, ரமேஷ், ஸ்ரீதர், ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :நான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் இது இல்லை - கண்ணீர் வடிக்கும் கோவை மாணவர்