தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை - 7 பேர் மீது வழக்குப்பதிவு! - சார் பதிவாளர் அலுவலகம்

தஞ்சாவூர்: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.23 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Corruption Eradication Office at the Registrar's Office - Case filed against 7 persons!
Corruption Eradication Office at the Registrar's Office - Case filed against 7 persons!

By

Published : Oct 13, 2020, 9:22 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கச்சேரி பதிவாளர் அலுவலகதில், இணை சார் பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் கும்பகோணம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு ஆவணங்கள் பதிவு செய்ய பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி எஸ். மனோகரன், ஆய்வாளர் சி.பத்மாவதி தலைமையில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் நேற்று (அக்.12) மாலை 6 மணி அளவில் மாறுவேடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அதிரடியாக சார் பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பணியாளர்கள் லஞ்சமாக பெறப்பட்ட ரூ.23 ஆயிரத்து 400 ரொக்கப் பணத்தை சார் பதிவாளர் அறை, கணினி அறை, ஆவணங்கள் வைப்பறை ஆகிய இடங்களில் வைத்திருந்தனர். கேட்பாரற்ற நிலையில் கிடந்த இந்தப் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிருந்த பணியாளர்களிடம், இணை சார்பதிவாளர் ஆசைதம்பியிடமும் இரவு 11.30 மணி வரை விசாரணை நடத்தினர்.

விசானையில் ஆவண எழுத்தர்களிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது என்ற தகவல் துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சார் பதிவாளர் ஆசைத்தம்பி, இளநிலை எழுத்தர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குநர் உள்பட ஏழு பேர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 102 மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் 77ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதையும் படிங்க:மூதாட்டியிடம் நட்பு ரீதியாகப் பழகி தங்க நகைகளைத் திருடிய பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details