தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் அமைந்துள்ளது கல்யாண ஓடை கிராமம். இக்கிரமாத்தில் உள்ள மக்கள் கரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முதலாவதாக ஊருக்குள் அந்நியர்கள் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்றும் உற்றார், உறவினர்களாக இருந்தால் கூட ஊருக்குள் வரக்கூடாது என்றும் கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் ஊரின் முகப்பில், பிளக்ஸ் போர்டு வைத்து, அந்த போர்டில் திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் புகைப்படமும் பொறிக்கப்பட்டு, அந்நியர்கள் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்ற வாசகம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமத்தையே தனிமைப்படுத்திக் கொண்ட மக்கள்! இதுதவிர மதுக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா செந்தில் அப்பகுதியில் சாணம், மஞ்சள், கிருமிநாசினி பொருட்கள் அடங்கிய தண்ணீரை டிராக்டர் மூலம் தெருக்களில் தெளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதவிர ஒவ்வொரு வீடுகளுக்கும், நேரடியாகச் சென்று தங்களது சொந்த செலவில் பினாயில் பாட்டில் கையுறைகள், முகக் கவசங்களை இலவசமாகவும் வழங்கியுள்ளார்.
இதன்மூலம் தங்களது கிராமத்தையே இவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு அரசு அறிவுறுத்தியது போல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நியாயவிலைக் கடை பொருள்கள் கொடுப்பது குறித்து முன்னோட்டம்!