தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுக்கு பூர்விகம் திருவாரூர் மாவட்டம் மறையூராகும். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை வைத்துள்ளதால், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.
இதில், கணேஷ் பா.ஜ.க., வர்த்தக பிரிவில் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர்.
ஆனால், கொரோனா காரணத்தை காட்டிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ், பணத்தை செலுத்தியவர்களிடம் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.