தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரெவி புயல் பாதிப்பு: தஞ்சையை பார்வையிட்ட மத்திய குழுவினர்!

புரெவி புயலால் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. அப்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய குழுவினர் ஆய்வு இன்று (டிச., 30) ஆய்வு மேற்கொண்டனர்.

Central team inspects puravi affected tanjore
Central team inspects puravi affected tanjore

By

Published : Dec 30, 2020, 10:23 PM IST

தஞ்சாவூர்: புரெவி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய அரசின் கூடுதல் முதன்மைச் செயலர்கள் அசுதேஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றனர்.

அங்கு மதுக்கூர் அருகேயுள்ள பெரிய கோட்டை கிராமத்தில் மழையின்போது கண்ணன் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால், சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

அலுவலர்களிடம் சேதமான பயிர்களை காண்பிக்கும் விவசாயிகள்

அப்போது, மாவட்டத்தில் புயலால் நெல், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட 21,576 ஏக்கரில் பயிர்களும், 11,065 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், இதற்கு உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details