தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீர்  விவகாரம்: மக்களின் கருத்தை கேட்டிருக்கவேண்டும் - வைரமுத்து - கவிப்பேரரசு வைரமுத்து

தஞ்சாவூர்: மத்திய அரசு காஷ்மீர் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டிருந்தால் வரும் விளைவுகள் மண்ணுக்கும், மக்களுக்கும் சாதகமாக இருந்திருக்கக்கூடும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu

By

Published : Aug 10, 2019, 6:16 AM IST

தஞ்சாவூரில் தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து கூறுகையில், காலங்கள் மாறினாலும், பண்பாடுகள் மாறினாலும் தமிழ் மொழியானது, தமிழர்களுக்கு ஏற்றவாறு புனரமைத்து வந்து கொண்டிருக்கிறது. கணிப்பொறித் தலைமுறையினர் தமிழ் மொழியையும், தாய்மொழியையும் விட்டு தள்ளி நிற்கின்றனரோ என்ற ஐயமும், அச்சமும் எனக்கு உண்டு.

செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து

அத்தகைய தலைமுறையினருக்கு தமிழைப் போதிப்பதும் தமிழின் தத்துவங்களை அடிபோற்றுவதும் தமிழாற்றுபடையின் நோக்கம். தமிழாற்றுப்படையை கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக இருக்க வேண்டும் என்பதைவிட, அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் வேதப்புத்தகமாக வாசிக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு காஷ்மீர் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டிருந்தால் விளைவுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் சாதகமாக இருந்திருக்கக்கூடும். தமிழர்களுக்கும் காஷ்மீரை போன்ற நிலைமை வரும் என்ற வருத்தம் இருக்கிறது. அவ்வாறு வரக் கூடாது என்பது எனது கருத்து என்றார்.

ABOUT THE AUTHOR

...view details