தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர்: நூதன முறையில் வேட்புமனு தாக்கல் - நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்

தஞ்சாவூர்: கெயில் குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் மற்றும் குழாய் வடிவில் கெயில் என்று எழுதிய வாசகங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்புமனுத் தாக்கல்

By

Published : Mar 26, 2019, 10:58 PM IST

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 26 ) பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் 7 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோலியம் மண்டலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடனும், கெயில் குழாயை போன்று அட்டையில் வடிவமைத்த குழாயுடனும் வந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி பதாகைகளையும் மற்றும் கெயில் குழாய் போன்று அமைக்கப்பட்டிருந்த அட்டையை பிடுங்கிக்கொண்டு வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதித்தனர்.

வித்தியாசமான முறையில் வேட்புமனுத்தாக்கல் செய்யவந்த நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details