தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் மேட்டுத் தெரு பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து கொங்கன் வாய்க்கால் பிரிகிறது. தற்போது காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொங்கன் வாய்க்காலின் ஷட்டர் தண்ணீரின் வேகம் தாங்காமல் நள்ளிரவில் உடைந்தது.
மதகு உடைந்து வயலில் புகுந்த ஆற்று நீர்: பயிர்கள் நாசம்!
தஞ்சாவூர் : காவிரி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்காலில் உள்ள ஷட்டர் உடைந்ததால், தண்ணீர் வயலுக்குள் புகுந்து 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது.
இந்நிலையில், உடைந்த ஷட்டர் வழியே வந்த தண்ணீர் வயலுக்குள் புகுந்து, ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல், கரும்பு, மிளகாய், காய்கறி பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இச்சம்வத்திற்கு, பொதுப் பணித்துறையினர், ஷட்டரை முறையாக பராமரிக்காததே காரணம் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், உடைந்த கொங்கன் வாய்க்காலை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டு, உடைப்பு விரைவில் சரி செய்து தரப்படும் என்றார். மேலும், பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.