தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வைரக்கண்ணு (39). இவரது கணவர் குமரகுரு. வைரக்கண்ணு திருமணமாகி கடந்த 6 வருடங்களாக கணவரை பிரிந்து, தனது தாய் தனரோஜா வீட்டில் வசித்து வந்தார் . இவரது தம்பி அருண்குமார் (35). இவர்களது வீட்டில் ஒரு செல்போன்தான் உள்ளது.
செல்போனுக்காக அக்காவை கொலை செய்த தம்பி கைது! - Brother arrest
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே செல்போனுக்காக ஏற்பட்ட தகராறில் சொந்த அக்காவை கட்டையால் அடித்து தம்பி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த ஒரு செல்போனை கொண்டு தான் வீட்டில் உள்ள மூன்று பேரும் பயன்படுத்தி வந்தனர். இதனால் அக்கா, தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. இந்த நிலையில், செல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தம்பி அருண்குமார், அக்கா வைரக்கண்ணுவை மரக்கட்டையால் பலமாக அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வைரக்கண்ணு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வைரக்கண்ணுவின் தாயார் தனரோஜா கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.