தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரை வெட்டிய சகோதரர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை - கும்பகோணம்

தஞ்சாவூர்: குடும்பத் தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சகோதரர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கும்பகோணம் நீதிமன்றம்
கும்பகோணம் நீதிமன்றம்

By

Published : Dec 4, 2019, 10:39 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி ரமேஷை, அவரது உறவினரும் எதிர் வீட்டில் வசிப்பவருமான முருகேசனின் மகன்கள் குமரேசன் ( 37 ) பிரபாகரன் ( 34 ) ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த ரமேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் ரமேஷ் கொடுத்தப் புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை , கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவராமானுஜம் , அரிவாளால் வெட்டிய குமரேசன், பிரபாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர். மேலும் ரூ 1,500 அபராதமும் விதித்தனர்.

இதையும் படிங்க:

சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details