தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கழுதையை குதிரை என்று நினைத்து ஏமார்ந்தேன்... அதிமுகவில் இணையத் தயார்’ - அமமுக புகழேந்தி - ammk spokesperson pugazhendhi pressmeet

தஞ்சாவூர்: டிடிவி தினகரனின் கட்சி குதிரை என நினைத்து ஆதரவளித்ததாகவும், ஆனால் அது கழுதையாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ammk spokesperson pugazhendhi pressmeet

By

Published : Nov 18, 2019, 4:39 PM IST

தஞ்சாவூரில், அமமுக தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அமமுக கலைக்கப்பட்டுவிட்டது. அதிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவில் இணையப் போகிறார்கள். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், நாங்கள் அதிமுகவில் மிக விரைவில் இணையப் போகிறோம்.

அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடவும் போகிறோம். டிடிவி தினகரனை குதிரை என்று நினைத்து, அமமுகவில் இணைந்தோம். ஆனால், இணைந்த பிறகுதான் தெரிகிறது அது குதிரை அல்ல கழுதை என்று. நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம். அதிமுகவில் உள்ள அனைவரும் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவதில் சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details