தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கில் போர் வெற்றி விழாவில் சாகச நிகழ்ச்சி! - விமானப்படை

தஞ்சாவூர்: விமானப்படை நிலையத்தில் கார்கில் போர் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் கார்கில் போர் வெற்றிவிழா !

By

Published : Jul 18, 2019, 6:58 PM IST

கார்கில் போர் (1999) வெற்றி விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு கார்கில் போர் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் மூன்று பைலட்டுகள் இடம்பெற்றிருந்தனர். நான்கு ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்தும் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று சாகசங்களை நிகழ்த்தின. மேலும், பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே விமான ஓட்டுநர்களாக, விமானப் படையில் சேர்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் சாகசங்கள் இருந்தன.

கார்கில் வெற்றி விழா சாகசங்கள்

இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கண்டுகளித்தனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் விமானப்படை நிலைய அணி தளபதி பிரஜூல் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details