தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்.6-இல் டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்!

Ex Minister Kamaraj: கர்நாடக அரசு தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் அக்டோபர் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

தமிழக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:16 AM IST

Updated : Oct 3, 2023, 11:20 AM IST

அக்.6-இல் டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்:அதிமுகவில் காலியாக இருந்த மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செயலாளராக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை நேற்று (அக்.2) அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர், தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் காமராஜ் பேசுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தஞ்சாவூரில் அதிமுக இருக்கிறதா அல்லது இல்லாமல் போய்விடுமா என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி இன்றைக்கு தஞ்சையில் நம்பர் ஒன் இயக்கம் அதிமுகதான். நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக முதல் வெற்றி பெற்றது தஞ்சாவூரில்தான் என்று இருக்க வேண்டும். தேர்தலில் தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதியை அதிமுக கைப்பற்றும் என்ற நம்பிக்கையைத் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், “மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. தஞ்சை பூமியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் காய்ந்து போய் உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். உரிய காலத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தராத அரசாங்கமாக திமுக மற்றும் தமிழகத்தின் முதலமைச்சர் இருக்கிறார். தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் வருகிற 6ஆம் தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டமானது கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது.

சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:“தமிழகத்தில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்சினைக்கு இடமில்லை” - அமைச்சர் கே.என்.நேரு

Last Updated : Oct 3, 2023, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details